Oct 18, 2025
Thisaigal NewsYouTube
நிகழ்வில் பிரபலமான இந்தியத் திறமையாளர்களைச் சந்தியுங்கள்
சினிமா

நிகழ்வில் பிரபலமான இந்தியத் திறமையாளர்களைச் சந்தியுங்கள்

Share:

கோலாலம்பூரில் உள்ள மிட் வேலி கண்காட்சி மையத்தில் ஏப்ரல் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் 18வது குளோபல் இந்தியன் பெஸ்டிவல் நிகழ்ச்சியில் டெனெஸ் குமார், விகடகவி மகேன், ஆனந்தா, உதயா, மூன் நிலா, ஜெய்ஸ்ரீ, ஜேம்ஸ், தாஷா, நித்யா ஸ்ரீ, ஆல்வின் மார்ட்டின், அருளினி, ஓர்கா, மோகனா ராஜ், கலவந்திகா, ஆகியத் தங்களுக்குப் பிடித்த உள்ளூர் திறமையாளர்களைச் சந்திக்க அனைத்து மலேசியர்களும் அழைக்கப்படுகிறார்கள்.

18வது குளோபல் இந்தியன் பெஸ்டிவலுடன் இணைந்து நடைப்பெறும் #NewAstro நிகழ்வைக் கோகுலன் ராகா மற்றும் விக்கினேஸ்வரி ஆகியோர் தொகுத்து வழங்குவர். மேலும், உள்ளூர் கலைஞர்களின் சிறப்புப் பகிர்வு அங்கங்கள் மற்றும் படைப்புகளை இரசிகர்கள் இவ்விரண்டு நாட்களில் எதிர்ப்பார்க்கலாம். இந்நிகழ்வில், விருது வென்றத் தயாரிப்பாளர், நடிகர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளரான டெனெஸ் குமார், இந்தியப் பொழுதுபோக்கின் தாயகமாக ஆஸ்ட்ரோவின் நிலையை உறுதிப்படுத்தும் பல்வேறுச் சர்வதேச மற்றும் உள்ளூர் நாடகங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் உட்படப் புதிய ஆஸ்ட்ரோ அனுபவத்துடன் கிடைக்கப்பெறும் விரிவான மற்றும் ஆழமான இந்திய உள்ளடக்கத்தின் விபரங்கள் குறித்து இரசிகர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்.

ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் ஸ்ட்ரீமிங் செய்யக் கிடைக்கப்பெறும் வீரா, ஜோம்பி காதலி மற்றும் மன்மத புல்லட்ஸ் ரீலோடட்;முறையே ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) மற்றும் ஆஸ்ட்ரோ வானவில் வழியாக டிவியில் ஒளியேறிக் கொண்டிருக்கும் பசங்க மற்றும் சிங்கப்பெண்ணே; புதியத் தொடர்களான ஜீயும் நீயும், பேமிலி பியூட் மலேசியா தமிழ், பானாஸ் டாக் மற்றும் பல பிரபலமான உள்ளூர் தமிழ் விருப்பங்களை வாடிக்கையாளர்கள் இரசிக்கலாம்.

பசங்க எனும் உள்ளூர் தமிழ் நகைச்சுவை நாடகத் தொடரின் புதிய அத்தியாயங்கள், திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு டிவி மற்றும் ஆஸ்ட்ரோ கோ-இல் முதல் ஒளிபரப்புக் காணுகிறன அல்லது எப்போது வேண்டுமானாலும் ஆன் டிமாண்ட்-இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள். இந்தத் தொடரைப் பிரபல உள்ளூர் திரைப்பட இயக்குநர் ஷாலினி பாலசுந்தரம் இயக்கியுள்ளார் மற்றும் புகழ்பெற்றப் பிரபலத் தம்பதியரான டெனெஸ் குமார் மற்றும் டி.எஸ். டாக்டர் விமலா பெருமாள் தயாரித்துள்ளனர். மேலும், உள்ளூர் திறமையாளரான ஆர். பெரகாஸ் ராஜாராம் இயக்கிய சிங்கப்பெண்ணே தொடரின் புதிய அத்தியாயங்கள், ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு டிவி மற்றும் ஆஸ்ட்ரோ கோ-இல் முதல் ஒளிபரப்புக் காணுகிறன அல்லது எப்போது வேண்டுமானாலும் ஆன் டிமாண்ட்-இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள்.

புதிய ஆஸ்ட்ரோ மூலம் ஒரே தளத்தில் ஸ்ட்ரீமிங் செயலிகள் வாயிலாக உலகத்தரம் வாய்ந்தப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழுங்கள். இனி மழைக் குறுக்கீடு இல்லை, ஆஸ்ட்ரோ அல்ட்ரா பெட்டி வழியாக ஆன் டிமாண்ட்-இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள். மேல் விபரங்களுக்கு content.astro.com.myஎனும்அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

Related News