Aug 16, 2026
Thisaigal NewsYouTube
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் 2-ஆம் பாகம்: சிவகார்த்திகேயனுக்குப் பதில் கதாநாயகனாக களமிறங்கும் ரியோ ராஜ்!
சினிமா

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் 2-ஆம் பாகம்: சிவகார்த்திகேயனுக்குப் பதில் கதாநாயகனாக களமிறங்கும் ரியோ ராஜ்!

Share:

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில், சிவகார்த்திகேயனுக்குப் பதிலாக நடிகர் ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராக இருப்பதாக இயக்குநர் பொன்ராம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் ரியோ ராஜ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ரிவர்ரூட் ஸ்டுடியோஸ்' மூலம் தயாரித்து, அவரே கதாநாயகனாகவும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக இத்திரைப்படத்தின் கதையைச் சிவகார்த்திகேயனின் தற்போதைய வளர்ச்சிக்கு ஏற்ப இயக்குநர் பொன்ராம் மாற்றியமைத்திருந்த நிலையில், தற்போது ரியோ ராஜிற்காகக் கதையில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News