ஷா ஆலாம், ஜனவரி.31-
மலேசிய சூப்பர் லீக் கால்பந்தாட்டத்தில் பிடிஆர்எம்மும் கேஎல் சிட்டியும் 1க்கு 1 என சமநிலை கண்டன. செலாயாங் நகராண்மைக் கழக அரங்கில் அவ்வாட்டம் நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் ஒன்றுக்கு மற்றொன்று சளைக்காமல் ஈடு கொடுத்து சிறப்பாக விளையாடின. கேஎல் சிட்டி ஆட்டத்தில் முற்பாதியில் 12 ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் போட்டது.
இரண்டாம் பிற்பாதியில் எழுச்சி பெற்ற பிடிஆர்எம் 63 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தது. இறுதியில் இரு அணிகளும் சமநிலை கண்டன. அம்முடிவின் வாயிலாக இதுவரை 30 மொத்தப் புள்ளிகளைப் பெற்று கேஎல் சிட்டி புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 7 புள்ளிகளுடன் பிடிஆர்எம் கடைசி இடத்தை வகிக்கிறது.








