Sep 21, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் சின்னங்களால் சிக்கல்: ஃபிஃபாவின் முடிவை எதிர்நோக்கி அர்ஜென்டினா
விளையாட்டு

அரசியல் சின்னங்களால் சிக்கல்: ஃபிஃபாவின் முடிவை எதிர்நோக்கி அர்ஜென்டினா

Share:

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய பிறகு, அர்ஜென்டினா வீரர்கள் பால்க்லாந்து தீவுகள் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமானது என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து ஃபிஃபா விசாரணை நடத்தி வருகிறது. கால்பந்து மைதானங்களில் அரசியல் குறியீடுகளைப் பயன்படுத்துவதற்கு ஃபிஃபா விதிகளில் தடை உள்ளதால், இந்தச் செயலை இங்கிலாந்து அரசாங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது. அரசியல் மற்றும் விளையாட்டு இரண்டையும் பிரித்து பார்க்க வேண்டும் என்று இங்கிலாந்து அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மறுபுறம், அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மைலே, தனது நாட்டு வீரர்களின் இந்தச் செயல் நியாயமானது என்று கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக 2014-ஆம் ஆண்டும் இதே போன்ற செயலுக்காக அர்ஜென்டினா கால்பந்து சங்கத்திற்கு ஃபிஃபா அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விவகாரத்தில் ஃபிஃபா என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News