சிட்னி, ஜனவரி.30-
சிட்னி விமான நிலையத்தில் 26 வயதுடைய மலேசியர் ஒருவரின் கைப்பேசியில், குழந்தை பாலியல் துஷ்பிரயோக காணொளிகள் இருந்ததால் அவர் நாடு கடத்தப்பட்டார்.
மலேசியாவிலிருந்து சிட்னி சென்றடைந்த அந்நபரை, ஆஸ்திரேலிய எல்லைப் படையான ABF, சாதனப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அவரது கைப்பேசியில் இருந்த குழந்தை பாலியல் துஷ்பிரயோக காணொளிகளைக் கண்டறிந்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட காட்சிகள் உட்பட கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட படங்கள் அவரது கைப்பேசியில் சேமிக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகின்றது.
இதனையடுத்து உடனடியாக அவரது விசாவை இரத்து செய்த அதிகாரிகள், அவரை மலேசியாவிற்கு நாடு கடத்தினர்.








