வியட்நாமின் குவாங் நாம் மாநிலத்தைச் சேர்ந்த தாய் ங்காக் என்ற 81 வயது விவசாயி, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நிமிடம் கூட தூங்கவில்லை என்று கூறி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தாய் ங்காக் கூறுகையில், 1962-ம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட ஒரு கடுமையான காய்ச்சலுக்குப் பிறகு, தூங்கும் திறனைத் தாம் இழந்து விட்டதாகத் தெரிவிக்கிறார். அன்றிலிருந்து இன்று வரை சுமார் 63 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் விழித்தே இருக்கிறார்.
தூக்கமின்மை இருந்த போதிலும், அவர் பகல் நேரங்களில் தனது வயலில் விவசாயப் பணிகளை மேற்கொள்கிறார். 50 கிலோ எடையுள்ள மூட்டைகளை நீண்ட தூரம் சுமந்து செல்லும் அளவுக்கு அவர் உடல் வலிமையுடன் இருக்கிறார். மற்றவர்கள் உறங்கும் இரவில், இவர் தனது பயிர்களைக் கவனிப்பது அல்லது அரிசி மது தயாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்.
இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இவரது இதயம், ரத்த அழுத்தம் மற்றும் மூளைச் செயல்பாடுகள் இயல்பாக இருப்பதை உறுதிச் செய்துள்ளனர். நீண்ட காலத் தூக்கமின்மையால் வழக்கமாக ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் இவருக்கு இல்லை என்பது மருத்துவ அறிவியலுக்குப் சவாலாக உள்ளது.
மனிதர்கள் தூக்கம் இல்லாமல் இத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்வது சாத்தியமில்லை என்று கருதும் நிபுணர்கள், இதற்குப் பின்வரும் காரணங்களைச் சொல்கின்றனர். கண்கள் திறந்திருக்கும் போதே மூளை சில நொடிகள் மட்டும் ஓய்வெடுக்கும் நிலை இவருக்கு இருக்கலாம்.
மூளை சிறிது நேரம் ஓய்வெடுத்தாலும், ஒரு நபர் தாம் விழித்தே இருப்பதாக உணரும் நிலை. வியட்நாம் போரின் போது ஏற்பட்ட அதிர்ச்சிகளால் இவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் கருதுகின்றனர். மற்றவர்கள் நிம்மதியாகத் தூங்குவதைப் பார்த்துத் தாம் பொறாமைப்படுவதாக தாய் ங்காக் கூறுகிறார். பல வெளிநாட்டு மருத்துவக் குழுக்கள் இவருக்கு இலவச சிகிச்சை அளிக்க முன்வந்தும், தனது கிராமத்தை விட்டு வெளியேற விரும்பாததால் அவர் அதை மறுத்து விட்டார்.
அமெரிக்கப் பயணக் கட்டுரையாளரும் யுடியூபருமான டிரேவ் பின்ஸ்கி என்பவர் கடந்த 2023-ல் தாய் ங்காக்கின் இல்லத்தில் ஓர் இரவு தங்கி அவரைக் கண்காணித்தார். தாய் ங்காக் இரவு முழுவதும் விழித்திருந்து அரிசி மது தயாரிப்பதிலும், வயல் வேலைகளிலும் ஈடுபட்டதை அவர் உறுதிப்படுத்தினார். அதிகளவு மது அருந்தினால் மட்டும் 1 அல்லது 2 மணி நேரம் மூளை ஒருவித மயக்க நிலைக்குச் செல்வதாக அவர் கவனித்தார், ஆனால் அது முறையான தூக்கம் கிடையாது.
உலக அளவில் பல மருத்துவமனைகள் இவரைப் பரிசோதிக்கவும், சிகிச்சை அளிக்கவும் இலவசமாக அழைப்பு விடுத்தன. ஆனால், "நான் ஆரோக்கியமாகவே உணர்கிறேன், எனக்கு சிகிச்சை தேவையில்லை" என்று கூறி அவர் தனது கிராமத்தை விட்டு வெளியேற மறுத்து விட்டார். இருப்பினும், மற்றவர்கள் நிம்மதியாகத் தூங்குவதைப் பார்க்கும் போது தனக்கும் அது போன்ற ஒரு தூக்கம் கிடைக்காதா என்ற ஏக்கம் இவருக்கு உள்ளதை மறைக்கவில்லை.
இந்தத் தூக்கமில்லா வாழ்க்கை முறை என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஓர் அதிசயமாகவே இன்றும் தொடர்கிறது.








