கலர்புல் பீட்டா மூவ்மென்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், உருவாகும் படம் 'ஹர்காரா'. இப்படத்தில் 'வி1 மர்டர் கேஸ்' என்ற படத்தில் நடித்த ராம் அருண் காஸ்ட்ரோ கதாநாயகனாக நடிப்பது மட்டுமின்றி, அவரே இப்படத்தை இயக்கியுள்ளார். மற்றொரு நாயகனாக காளி வெங்கட், நாயகியாக கௌதமி ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். பிச்சைக்காரன் புகழ் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் எனும் கருப்பொருளுடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக்கிராமத்திற்குச் செல்லும் போஸ்ட்மேன் அங்குப் படும் அவஸ்தையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையும், பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
