Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ரூ.56 கோடி கடன் விவகாரம்: சன்னிதியோலுக்கு அனுப்பிய ஏல அறிவிப்பை வாபஸ் பெற்ற பரோடா வங்கி
சினிமா

ரூ.56 கோடி கடன் விவகாரம்: சன்னிதியோலுக்கு அனுப்பிய ஏல அறிவிப்பை வாபஸ் பெற்ற பரோடா வங்கி

Share:

இந்தி நடிகர் சன்னி தியோல் நடித்து சமீபத்தில் வெளிவந்த கதார் 2 திரைப்படம் 'ஹிட்' ஆகி வசூலை குவித்து வருகிறது.

இந்நிலையில் சன்னிதியோலுக்கு சொந்தமாக மும்பை ஜூகு காந்தி கிராம் சாலையில் உள்ள பங்களாவை அவர் திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டூடியோவாக பயன்படுத்தி வந்தார். அந்த பங்களாவுக்காக அவர் பேங்க் ஆப் பரோடா வங்கியில் கடன் வாங்கி இருந்தார்.

அந்த பணத்தை சன்னி தியோல் முறையாக கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவருக்கு ரூ.56 கோடிக்கு மேல் செலுத்தப்படாமல் நிலுவை தொகை இருந்துள்ளது.

இதைத்தொடர்ந்து நிலுவை தொகையை மீட்பதற்காக சன்னி தியோலுக்கு சொந்தமான பங்களாவை ஏலம் விட வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி அவரது பங்களா வருகிற 25-ந்தேதி ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படும் என வங்கி தரப்பில் பங்களாவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.

சன்னி தியோலின் உண்மையான பெயர் அஜய்சிங் ஆகும். அஜய்சிங் பெயரில் தான் பங்களாவும் இருக்கிறது. எனவே அந்த பெயரில் ஏலம் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் திடீரென ஏல அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக பேங்க் ஆப் பரடோ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News