Sep 2, 2026
Thisaigal NewsYouTube
முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற நடிகர்கள் அதர்வா மற்றும் கவின்!
சினிமா

முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற நடிகர்கள் அதர்வா மற்றும் கவின்!

Share:

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை நடிகர்கள் அதர்வா மற்றும் கவின் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளனர். தங்களின் அடுத்தடுத்த திரைப்பட வெளியீடுகளை முன்னிட்டு இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. முதலமைச்சரைச் சந்தித்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள இரு நடிகர்களும் தங்களின் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

நடிகர் அதர்வா நடித்துள்ள இதயம் முரளி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு தனக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் விஜய் அவர்களைத் தனது சொந்த அண்ணனாகவே கருதுவதாகவும், இத்தகைய முக்கிய நாளில் அவருடைய அன்பையும் ஆசிகளையும் பெற்றது தனக்கு மிகுந்த உத்வேகத்தைத் தருவதாகவும் பதிவிட்டுள்ளார்.

மறுபுறம், முதலமைச்சரின் எளிமையையும் கனிவையும் பாராட்டிப் பேசியுள்ள நடிகர் கவின், பல கோடிக்கணக்கான மக்களைப் போலத் தானும் அவரைத் திரையில் பார்த்து வளர்ந்ததாகவும், தற்போது அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்களுக்குச் சேவை செய்வதைக் காண்பது வாழ்நாள் முழுவதும் ஊக்கமளிக்கும் ஒரு கதை என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். நடிகர் கவின் தற்போது நயன்தாராவுடன் இணைந்து ஹாய் என்ற திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related News