Sep 2, 2026
Thisaigal NewsYouTube
ஏ தணிக்கை சான்றுடன் விஜயின் 'ஜனநாயகன்' - உலகம் முழுவதும் ஜூலை 24-ம் தேதி வெளியீடு
சினிமா

ஏ தணிக்கை சான்றுடன் விஜயின் 'ஜனநாயகன்' - உலகம் முழுவதும் ஜூலை 24-ம் தேதி வெளியீடு

Share:

தமிழக முதல்வர் விஜய் நாயகனாக நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம், பல தடைகளுக்குப் பிறகு வரும் ஜூலை 24-ம் தேதி வெளியீடு காணவுள்ளது.

விஜய் கடைசியாக நடித்த திரைப்படமான ஜனநாயகன், தேர்தலுக்கு முன்பாக, வெளியிட முயற்சித்தும் கூட, தணிக்கை வாரியம், சான்றிதழ் வழங்கவில்லை.

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தவெக கட்சியானது மாபெரும் வெற்றி பெற்று, தற்போது விஜய் தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகின்றார்.

இந்த சூழ்நிலையில் ஜனநாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியிருப்பதாக தணிக்கை வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், வரும் ஜூலை 24 ஆம் தேதி உலகம் முழுவதும் இத்திரைப்படமானது பிரம்மாண்ட வெளீயீடு காணவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Related News