தமிழ்த் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ், உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75.
மறைந்த இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் இசையில் பல பாடல்களைப் பாடியவர் கிருஷ்ணராஜ். ‘காதல் கோட்டை’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ பாடல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார்.
‘பொற்காலம்’ திரைப்படத்தில் அவர் பாடிய ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடலுக்குத் தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது கிடைத்தது. ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் ‘ஈச்சி எலுமிச்சி’, ‘நட்புக்காக’ படத்தில், ‘மீசக்கார நண்பா’,
‘பருத்திவீரன்’ படத்தின் ‘ஐய்யய்யோ’, ‘கழுகு’ படத்தின் ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’ உள்ளிட்ட பாடல்களும் அவரது தனித்துவமான குரலுக்குச் சான்றாகத் திகழ்கின்றன.
அவரது இழப்பு திரைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னணிப் பாடகராகத் தனது குரலால் ரசிகர்களைக் கவர்ந்த ஆர். கிருஷ்ணராஜ், திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி, பல பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.








