Sep 16, 2026
Thisaigal NewsYouTube
20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருமண உறுதிமொழி எடுத்த சூர்யா - ஜோதிகா
சினிமா

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருமண உறுதிமொழி எடுத்த சூர்யா - ஜோதிகா

Share:

தமிழ்த் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா, தங்களது 20ஆவது திருமண நாளை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளனர்.

தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற நிகழ்ச்சியில், இருவரும் மீண்டும் திருமண உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இது புதிய திருமணம் அல்ல; 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை கொண்டாடும் வகையில் நடைபெற்ற ‘லவ் ரினியூவல்’ நிகழ்ச்சியாகும்.

கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட சூர்யா – ஜோதிகா தம்பதிக்கு, தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். சூர்யாவின் சகோதரரும் நடிகருமான கார்த்தியும் இதில் பங்கேற்றிருந்தார்.

தேவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஜோதிகா வெள்ளை நிற திருமண கவுனிலும், சூர்யா வெள்ளை நிற tuxedo-விலும் தோன்றினர். மணப்பெண் போல் ஜோதிகா தேவாலயத்திற்குள் நடந்து வருவதைக் கண்ட சூர்யா உணர்ச்சிவசப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன.

Related News

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருமண உறுதிமொழி எடுத்த ... | Thisaigal News