Sep 11, 2026
Thisaigal NewsYouTube
‘மாடு அதாவ் ராசுன்’, ‘செலா’ நாடகத் தொடர்களை ஆய்வு செய்கிறது ஜாகிம் குழு
சினிமா

‘மாடு அதாவ் ராசுன்’, ‘செலா’ நாடகத் தொடர்களை ஆய்வு செய்கிறது ஜாகிம் குழு

Share:

உள்ளடக்கம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய மாடு அதாவ் ராசுன் மற்றும் செலா ஆகிய நாடகத் தொடர்களின் முழுமையான கதைக்களம் மற்றும் உள்ளடக்கத்தை, மலேசிய இஸ்லாமிய சமய மேம்பாட்டுத் துறையான ஜாகிம் மறுஆய்வு செய்யவுள்ளதாக தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான ஃபினாஸ் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை ஜாகிமுடன் நடைபெற்ற சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஃபினாஸ் தெரிவித்துள்ளது.

மேலும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையினருடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, உள்ளடக்கத் தயாரிப்புக்கான நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து விவாதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திரைப்படத் தயாரிப்புக்கான சான்றிதழில் கூடுதல் நிபந்தனைகளை அறிமுகப்படுத்தி, மத உணர்வுகள், கலாசார மதிப்புகள், சமூக நலன் மற்றும் நாட்டின் சட்டக் கட்டமைப்பை கருத்தில் கொண்டு தயாரிப்புகள் அமைவதை உறுதி செய்யப்படும் என ஃபினாஸ் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் இது படைப்புச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நோக்கமல்ல என்றும் விளக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மாடு அதாவ் ராசுன் தொடரை ஒளிபரப்புவதற்கு சமய விவகாரத் துறை எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இதையடுத்து, ஏற்கனவே வெளியான 6 அத்தியாயங்களை தற்காலிகமாக நீக்கப்பட்டு, மீதமுள்ள 6 அத்தியாயங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது அனைத்து 12 அத்தியாயங்களும் திருத்தப்பட்டு மறுஆய்வு செய்யப்பட உள்ளன.

Related News