Sep 28, 2026
Thisaigal NewsYouTube
விருதுகள்… இசை… நடனம்… விருந்து… சமூக அக்கறை…கோலாகலமாக நடந்த எம்கே ஐகோன் 2026
சினிமா

விருதுகள்… இசை… நடனம்… விருந்து… சமூக அக்கறை…கோலாகலமாக நடந்த எம்கே ஐகோன் 2026

Share:

விருதுகள் வழங்கப்பட்டன… இசை முழங்கியது… நடனங்கள் அரங்கேறின… சுவையான உணவு பரிமாறப்பட்டது… அதேவேளை சமூக அக்கறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களை ஒரே கலவையாகக் கொண்ட எம்கே ஐகோன் 2026 விருது விழா நேற்று பெட்டாலிங் ஜெயா ஸ்டார் நைட் அரேனாவில் கோலாகலமாக நடைபெற்றது.

முஸ்தாபா கான் தலைவராகக் கொண்ட பெர்சதுவான் ஹாக் மஷாராகாட் மலேசியா MK-PHMM அமைப்பு ஏற்பாடு செய்த இந்த விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கும், சமூகத்துக்கு தொடர்ந்து தங்களின் பங்களிப்பை வழங்கி வருபவர்களுக்கும், கலைஞர்களுக்கும், சமூக ஊடக பிரபலங்களுக்கும், எம்கே ஐகோன் அவார்ட் 2026 விருதுகள் வழங்கப்பட்டன.

நடிகரும் பாடகருமான பிரேம்ஜி, யாசிக்கா, பத்து எம்.பி. P. பிரபாகரன், சி.ஆர். கார்த்திக், சிறைச்சாலை அதிகாரி விஷ்ணு உட்பட பிரமுகர்களும், சமூக ஊடக பிரபலங்களும் கலந்து கொண்ட வண்ண மயமான இந்த நிகழ்வு, உறுமி மேள இசையுடன் கோலாலகலமாக தொடங்கியது.

நிகழ்விற்கு முத்தாய்ப்பு வைக்கும் வகையில் இரு சகோதரிகள் வழங்கிய டோலி மேள இசை, கண்ணைக் கவரும் நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அரங்கில் உற்சாகத்தை ஏற்படுத்தின.

சமூகத்திற்கு பல்வேறு பங்களிப்பை வழங்கியவர்களுக்கு 2026 எம்கே ஐகோன் சிறப்பு ஆளுமை விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். அந்த வகையில் செய்தித்துறையில் தன்னை பிணைத்துக்கொண்டு வெற்றி நடைப்போட்டு வரும் திசைகள் ஊடகம், சிறந்த ஓன்லைன் ஊடகத்திற்கான விருதை வென்றது.

விருது வழங்கும் நிகழ்விற்கு தலைமையேற்ற பெர்சதுவான் ஹாக் மஷாராகாட் மலேசியா அமைப்பின் தலைவர் முஸ்தாபா கான், திசைகளின் நிர்வாக இயக்குநர் ஜி.கே. பசுபதிக்கு 2026 எம்கே ஐகோன் சிறப்பு ஆளுமை விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டார்.

மேலும் சமூகத்திற்கு தொடர்ந்து பங்களிப்பை வழங்கி வரும் பல்வேறு தரப்பினருக்கும் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டனர். முஸ்தாபா கான் வழங்கிய உதவியின் மூலம் இன்று பல்வேறு நிலைகளில் உயர்ந்துள்ளவர்கள் இந்த விருதை பெற்றுக் கொண்டனர்.

விழாவின் முக்கிய சமூக அங்கீகாரமாக, வாழ்க்கையில் தடம் புரண்டிருந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், முஸ்தாபா கானின் வழிகாட்டுதலின் மூலம் மீண்டும் சரியான பாதைக்குத் திரும்பியதற்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பிரேம்ஜி மற்றும் யாசிக்கா இணைந்து வழங்கிய பாடல் நிகழ்விற்கு முத்தாய்ப்பாக அமைந்தது.

விழாவின் மற்றொரு முக்கிய அம்சமாக, மூன்று ஆதரவற்ற இல்லங்களுக்கு முஸ்தாபா கான் தலைமையில் தலா 10 ஆயிரம் ரிங்கிட் வீதம், மொத்தம் 30 ஆயிரம் ரிங்கிட் நிதியை MK-PHMM வழங்கியது.

தமது தலைமையிலான பெர்சதுவான் ஹாக் மஷாராகாட் மலேசியா அமைப்பு, யாரிடம் ஒரு ரிங்கிட் நன்கொடை வாங்காமலும், விருது பெறுகின்றர்களிடம் பணம் வாங்காமலும் அவர்களின் திறமையையும்,அளுமையையும் அங்கீகரித்து சொந்தப் பணத்தில் இந்த மாபெரும் நிகழ்வை ஏற்பாடு செய்து இருப்பதாக முஸ்தாபா கான் தெரிவித்தார்.

அதேவேளையில் விருது பெற்றவர்கள் அனைவரும் தகுதி படைத்தவர்கள். அவர்களின் நடவடிக்கைகள் கடந்த ஒரு வார காலமாக கண்காணிக்கப்பட்டப் பின்னரே இந்த விருதுகளுக்கு அவர்கள் தேர்வுப் பெற்றதாக முஸ்தாபா கான் குறிப்பிட்டார்.

விருந்தினர்களுக்காக சுவையான உணவுகளும் பரிமாறப்பட்ட நிலையில் முஸ்தாபா கான் நிறுவனம், அடுத்த திறக்கவிருக்கும் எம்கே & அம்மன் பட ஸ்டூடியோ நிகழ்வை, விளக்கு விசையில் கைவைத்து, பிரேம்ஜி.யும், யாசிக்கா ஆனந்தும் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்.

ஒட்டுமொத்தத்தில் சாதனையாளர்களையும் சமூகப் பங்களிப்பாளர்களையும் கௌரவிப்பதுடன், வாழ்க்கையில் தடம் புரண்ட இளைஞர்களை மீண்டும் சமூகத்தின் சரியான பாதைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியையும் அங்கீகரித்து, ஆதரவற்ற இல்லங்களுக்கும் உதவிக்கரம் நீட்டிய விழாவாக எம்கே ஐகோன் அவார்ட் 2026 அமைந்தது.

Related News