Oct 25, 2026
Thisaigal NewsYouTube

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!

இந்தியாவின் பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு, உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். கடந்த சில நாள்களாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விஜய் தொலைக்காட்சியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இவர், 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் சமையல் துறையில் சேவையாற்றியுள்ளார்.

இவரது சாதனைகளைப் பாராட்டி, கடந்த 2025-ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது.

அவரது மறைவுக்குத் திரையுலகினர் மற்றும் சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →