Aug 21, 2026
Thisaigal NewsYouTube
"ஹாய்" படத்தில் நடிகை நயன்தாராவுடன் நடிப்பு குறித்து நடிகர் கவினின் நெகிழ்ச்சியான கருத்து
சினிமா

"ஹாய்" படத்தில் நடிகை நயன்தாராவுடன் நடிப்பு குறித்து நடிகர் கவினின் நெகிழ்ச்சியான கருத்து

Share:

நடிகர் கவின், இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாய் ’ திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய கவின், “சீரியலில் நடித்துக் கொண்டிருந்த கவின், நயன்தாராவுடன் நடிப்பார் என ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்” என்ற வைரல் கருத்தை நினைவுகூர்ந்தார்.

மேலும், 2008-ல் திருச்சியில் நயன்தாரா நடித்த ‘யாரடி நீ மோகினி’ படத்தை 23 நண்பர்களுடன் பார்க்கச் சென்றதையும், அப்போது சிலருக்கு டிக்கெட் கிடைக்காமல் இருந்ததையும் பகிர்ந்தார்.

“நயன்தாராவுடன் நடிப்பது என் பக்கெட் லிஸ்டில்கூட இல்லை. இந்த வாய்ப்பு கிடைத்தபோது, வாழ்க்கையில் ஏதோ நல்லது செய்திருக்கிறேன் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. இதற்காக கடவுளுக்கு நன்றி,” என கவின் தெரிவித்தார்.

கவின் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு முன்னேறி, தற்போது முன்னணி நடிகராக உயர்ந்திருப்பது பாராட்ட கூடியது என குறிப்பிடத்தக்கது.

Related News