Sep 12, 2026
Thisaigal NewsYouTube
ஜன நாயகன்’ வசூல் ரூ.194 கோடியை கடந்தது
சினிமா

ஜன நாயகன்’ வசூல் ரூ.194 கோடியை கடந்தது

Share:

நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படம், 21-வது நாளிலும் இந்தியாவில் ரூ.65 லட்சம் நிகர வசூல் செய்துள்ளது.

எச். வினோத் இயக்கிய இப்படம், ஆகஸ்ட் 12-ஆம் தேதி 1,991 காட்சிகளில் திரையிடப்பட்ட நிலையில், இந்தியாவின் மொத்த நிகர வசூல் ரூ.194.35 கோடியை எட்டியுள்ளது. இந்தியாவில் மொத்த வசூல் ரூ.226.37 கோடியாகவும், வெளிநாடுகளில் ரூ.93.20 கோடியாகவும் பதிவாகியுள்ளது.

இதன் மூலம், படத்தின் உலகளாவிய மொத்த வசூல் ரூ.319.57 கோடியாக உயர்ந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது

Related News