Aug 18, 2026
Thisaigal NewsYouTube
இருளன்’ படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய்க்கு காயம்: தீவிர சிகிச்சையில் மீண்டு வருகிறார்!
சினிமா

இருளன்’ படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய்க்கு காயம்: தீவிர சிகிச்சையில் மீண்டு வருகிறார்!

Share:

நடிகர் அருண் விஜய், இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் ‘இருளன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது காயமடைந்துள்ளார்.

திருநெல்வேலி–தூத்துக்குடி பகுதிகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த ஆக்‌ஷன் படத்தில் சண்டைக் காட்சியில் நடித்தபோது, அவரது தொடைப் பின்தசையில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அதற்கான மறுவாழ்வு சிகிச்சையை அவர் மேற்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அருண் விஜய், “காயம் காரணமாக வழக்கமான பயிற்சியை நிறுத்துவது வருத்தமாக இருக்கிறது. ‘இருளன்’ படப்பிடிப்பில் தொடைத் தசையில் காயம் ஏற்பட்டது. தற்போது சிகிச்சை எடுத்து வருகிறேன். இது விளையாட்டின் ஒரு பகுதி. இன்னும் வலிமையுடன் திரும்புவேன்” என தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்காக உடல் எடையைக் குறைத்து, கட்டுக்கோப்பான தோற்றத்திலும் அருண் விஜய் நடித்து வருகிறார்.

Related News