நடிகை த்ரிஷா குறித்து நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், "த்ரிஷா நான் அறிந்த மிக இனிமையான மனிதர்களில் ஒருவர். அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே, மிஸ் சென்னை பட்டம் வென்ற காலத்திலிருந்தே எங்கள் நட்பு தொடர்கிறது" என்றார்.
மேலும், தனது குடும்பத்துடன் த்ரிஷாவுக்கு தனிப்பட்ட பாசப்பிணைப்பு இருப்பதாகக் கூறிய குஷ்பு, மகள் அவந்திகாவின் திருமணத்தில் த்ரிஷா நான்கு நாட்கள் குடும்பத்துடன் இருந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.
த்ரிஷா குறித்து பரவிய வதந்திகளின் போதும், அவரை "மிகுந்த கண்ணியமும் மென்மையான மனமும் கொண்டவர்" என்று குஷ்பு ஆதரித்து பேசியிருந்தார்.








