உடலநலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை சௌகார் ஜானகி காலமானார்.
அவருக்கு வயது 94.
தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவரான சௌகார் ஜானகி, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
கடந்த 1950 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ’சவுகாரு’ திரைப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அதை தொடர்ந்து சௌகார் ஜானகி என அவர் அழைக்கப்பட்டார்.
தமிழில் புதிய பறவை, எதிர் நீச்சல், பாமா விஜயம், பார் மகளே பார், நீர்க்குமிழி, இரு கோடுகள் போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
சௌகார் ஜானகியின் மறைவு தென்னிந்திய திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது








