Aug 14, 2026
Thisaigal NewsYouTube
ரஜினிகாந்தின் இரட்டை பட வெளியீடு: சாதனை படைக்குமா? சிக்கலில் முடிவடையுமா?
சினிமா

ரஜினிகாந்தின் இரட்டை பட வெளியீடு: சாதனை படைக்குமா? சிக்கலில் முடிவடையுமா?

Share:

கூலி படத்தின் தோல்வியைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி தசரா சிறப்பாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அஸ்வத் மாரிமுத்து இயக்கும் தர்மன் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

தர்மன் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால், ஜெயிலர் 2 வெளியாகி இரண்டு மாதங்களிலேயே தர்மன் வெளியானால், ரசிகர்கள் ஜெயிலர் 2 தாக்கத்தில் இருந்து மீள போதிய காலம் இருக்காது என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனால், தர்மன் படத்தை கோடை விடுமுறையில் வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். தர்மன் மற்றும் சிவகார்த்திகேயனின் சேயோன் ஆகிய இரு படங்களையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதால், வெளியீட்டு மோதல் இருக்காது எனவும் கூறப்படுகிறது.

தர்மன் வெளியீட்டு தேதி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Related News