Aug 20, 2026
Thisaigal NewsYouTube
பழம் பெரும் நடிகை சௌகார் ஜானகி கவலைக்கிடம்
சினிமா

பழம் பெரும் நடிகை சௌகார் ஜானகி கவலைக்கிடம்

Share:

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. 94 வயதான அவர் சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த ஒரு வாரமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று இரவு உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

1950ஆம் ஆண்டு ‘சௌகார்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

திரையுலகில் நீண்டகாலப் பங்களிப்புக்காக 2022ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. அவர் விரைவில் குணமடைய ரசிகர்களும் திரையுலகினரும் பிரார்த்தித்து வருகின்றனர்.

Related News