Sep 11, 2026
Thisaigal NewsYouTube
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்
சினிமா

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

Share:

பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த பேராசிரியர் சாலமன் பாப்பையா இன்று தமது 90-வது வயதில் காலமானார்.

மதுரையைச் சேர்ந்தவரான சாலமன் பாப்பையா, தமிழகத்தின் புகழ்பெற்ற தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர், பேராசிரியர் என பன்முகங்கள் கொண்டவர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சிகளில் பட்டிமன்றங்களை நடத்தி வந்ததோடு, உலகளவில் ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களுக்கு நடுவராகவும் வழிநடத்தியுள்ளார்.

இதனிடையே, தமிழ் இலக்கியச் சேவைக்காக கடந்த 2021-ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார்.

அவரது மறைவு செய்து அறிந்து திரையுலகில் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related News