Jul 31, 2026
Thisaigal NewsYouTube
நின்றுபோன படத்தை முடித்துக் கொடுக்க நடிகர் துருவ் விக்ரமுக்கு உத்தரவு!
சினிமா

நின்றுபோன படத்தை முடித்துக் கொடுக்க நடிகர் துருவ் விக்ரமுக்கு உத்தரவு!

Share:

புதிய படங்களில் ஒப்பந்தமாவதற்கு முன்பு நின்றுபோன திரைப்படத்தை முடித்துக்கொடுக்குமாறு தமிழ் நடிகர் துருவ் விக்ரமுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலத்ரி ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் தொடங்கப்பட்ட 'டி.வி4' தற்காலிகத் தலைப்பு கொண்ட தெலுங்கு-தமிழ் இருமொழிப் படம், துருவ் விக்ரம் விலகியதால் பாதியிலேயே தடைபட்டது.

இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், துருவ் விக்ரம் தனது முந்தைய திரைப்படப் பணியை முடித்துக் கொடுத்த பின்னரே புதிய படங்களில் ஒப்பந்தமாக வேண்டும் என்று வர்த்தக சபை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி சென்னை எஸ்.ஐ.எப்.சி.சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News