வெங்கட் அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'விஷ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இந்த இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம், பல்வேறு உணர்ச்சிகள் மற்றும் குடும்பப் பின்னணியைக் கொண்ட கதையாக உருவாகியுள்ளதுடன், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.








