Oct 18, 2025
Thisaigal NewsYouTube
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வாழ்த்துவேன்- விஷால் பேட்டி
சினிமா

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வாழ்த்துவேன்- விஷால் பேட்டி

Share:

நடிகர் விஷால் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். அவருக்கு திரை உலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்த நாளையொட்டி ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம் தாய்-சேய் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப் பட்டது. முன்னதாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் அனைவருக்கும் உணவு வழங்கினார். அங்கு உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடியதுடன் அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வாழ்த்துவேன். 45 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் மூலம் ரஜினி மக்களை மகிழ்வித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபிக்கும் வகையில் இப்போதும் சாதனை படைத்து வருகிறார். 4 பேர் அமர்ந்து கொண்டு விருதாளர்களை தேர்வு செய்வது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மக்களும் ரசிகர்களும் தரும் ஆதரவே மகத்தான விருது. இவ்வாறு அவர் கூறினார்.

Related News