Sep 28, 2026
Thisaigal NewsYouTube
சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' மலையாளப் படத்தின் மறுபதிப்பா? - வதந்திகளுக்கு படக்குழு முற்றுப்புள்ளி
சினிமா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' மலையாளப் படத்தின் மறுபதிப்பா? - வதந்திகளுக்கு படக்குழு முற்றுப்புள்ளி

Share:

சென்னை, மார்ச் 9, 2026 –

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி வரும் 'விஸ்வநாத் & சன்ஸ்' (Vishwanath & Sons) திரைப்படம், 2007-ல் வெளியான பிருத்விராஜின் 'கங்காரு' (Kangaroo) படத்தின் ரீமேக் என்று சமூக வலைதளங்களில் பரவி வந்த செய்திகளைப் படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சூர்யா ஒரு குழந்தையைத் தூக்கி வைத்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதைப்பார்த்த ரசிகர்கள், 'கங்காரு' படத்திலும் பிருத்விராஜ் ஒரு குழந்தையைப் பராமரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால், இது அந்தப் படத்தின் மறுபதிப்பாக இருக்கலாம் என ஊகித்தனர்.

இந்த வதந்திகள் குறித்து விளக்கமளித்துள்ள தயாரிப்பு நிறுவனம் (Sithara Entertainments), இத்திரைப்படம் எந்தப் படத்தின் மறுபதிப்பும் அல்ல என்றும், இது இயக்குனர் வெங்கி அட்லூரி எழுதிய முற்றிலும் ஒரு நேரடித் தமிழ்க் கதை (Original Script) என்றும் உறுதிப்படுத்தியுள்ளது. 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபருக்கும், 20 வயது இளம்பெண்ணுக்கும் இடையிலான உறவு மற்றும் உணர்ச்சிகரமான பிணைப்பை மையமாகக் கொண்டு இந்தத் குடும்பத் திரைப்படம் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் 'பிரேமலு' புகழ் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரவீணா டாண்டன் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இத்திரைப்படம், வரும் ஜூலை மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' மற்றும் ஜித்து மாதவன் இயக்கத்தில் ஒரு புதிய படம் எனப் பல படங்களில் பிஸியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related News