Nov 16, 2026
Thisaigal NewsYouTube

கோலாலம்பூரில் இசைஞானி இளையராஜாவின் 'ராஜா 50' இசை நிகழ்ச்சிக்கான செய்தியாளர் சந்திப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோலாலம்பூரில் இசைஞானி இளையராஜாவின் 'ராஜா 50' இசை நிகழ்ச்சிக்கான செய்தியாளர் சந்திப்பு

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகாலத் திரை இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், மலேசியாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கான அதிகாரப்பூர்வ செய்தியாளர்கள் சந்திப்பு இன்று ஷா ஆலம் நகரில் உள்ள டிஎஸ்ஆர் மாநாட்டு மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பிங்க் ஏசியா (Pink Asia) மற்றும் மெர்குரி (Mercuri) ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இசை நிகழ்ச்சிக்கு 'ராஜா 50' (RAAJA 50) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் இசைஞானி இளையராஜா நேரில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மலேசிய ரசிகர்கள் தன் மீதும் தனது இசையின் மீதும் வைத்துள்ள எல்லையற்ற அன்பைப் பாராட்டி நெகிழ்ச்சியுடன் பேசினார். தனது 50 ஆண்டுகால இசைப் பயணத்தில் மலேசிய ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மாபெரும் நேரலை இசை நிகழ்ச்சி எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி, கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறவுள்ளது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து விவரித்த பிங்க் ஏசியா நிறுவனத்தின் இயக்குநர் ரவி வர்மன் விக்ரமன் இக்கலை விழாவில் இளையராஜாவின் 40 முதல் 45 பாடல்கள் இடம் பெறும் என்றார்.

இளையராஜாவின் காலத்தால் அழியாத பல நூறு பாடல்கள், பிரம்மாண்ட இசைக் குழுவினரின் நேரலை இசையுடன் அரங்கேறவுள்ளதால், மலேசியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள தமிழ் இசை ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிக்கெட் விற்பனை மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பின்னணிப் பாடகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →