Oct 18, 2025
Thisaigal NewsYouTube
நடிகை தமன்னாவை நெகிழ வைத்த பரிசு
சினிமா

நடிகை தமன்னாவை நெகிழ வைத்த பரிசு

Share:

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா தற்போது ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் சில தமிழ் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன. இந்த நிலையில் ஜெயிலர் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தபோது ரஜினிகாந்த் தனக்கு அளித்த பரிசு குறித்து நெகிழ்ந்துள்ளார்.

இதுகுறித்து வலைத்தளத்தில் தமன்னா வெளியிட்டுள்ள பதிவில், "ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் ஒரு ஆன்மிக புத்தகத்தை கையெழுத்திட்டு எனக்கு பரிசாக வழங்கினார். அந்த புத்தகம் எனக்கு பயன் அளிப்பதாக உள்ளது" என்று கூறியுள்ளார். ரஜினி தன்னை சந்திப்பவர்களுக்கு சிறிய ராகவேந்திரர் சிலை மற்றும் ஆன்மிக புத்தகங்கள் வழங்குது வழக்கம். தற்போது தமன்னாவும் அவரிடம் இருந்து ஆன்மிக புத்தக பரிசை பெற்று இருக்கிறார்.

Related News

நடிகை தமன்னாவை நெகிழ வைத்த பரிசு | Thisaigal News