Jun 13, 2026
Thisaigal NewsYouTube
சிம்புவிற்கு சொன்ன கதையில் பிரதீப் ரங்கநாதன்?
சினிமா

சிம்புவிற்கு சொன்ன கதையில் பிரதீப் ரங்கநாதன்?

Share:

இந்தியா, ஏப்ரல் 12-

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், இப்பொது மிகசிறந்த ஹீரோவாக உருவெடுத்துள்ளார். பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இப்பொது நடித்து வருகின்றார்.

கடந்த 2010ம் ஆண்டு வெளியான "ஓ மை கடவுளே" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் அஸ்வத் மாரிமுத்து. அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான அந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து அதே படத்தை அஸ்வத் "ஓரி தேவுடா" என்ற பெயரில் தெலுங்கு மொழியிலும் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து, பிரபல நடிகர் சிம்பு அவர்களை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அஸ்வந்த் அவர்களும், சிம்புவிடம் தான் ஒரு கதையை சொல்லியுள்ளதாகவும், அதற்கு சிம்பு ஓகே சொல்லிவிட்டார் என்றும் கூறியிருந்தார். ஆனால் அதன் பிறகு அந்த படம் குறித்த தகவல்கள் எதுவம் வெளியாகவில்லை.

இந்நிலையில் LIC என்ற படத்தில் நடித்து வரும் பிரபல இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன், விரைவில் அஸ்வந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில், சிம்புவிடம் சொன்ன கதையில் தான் பிரதீப் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இப்பொது அஸ்வந்த் வெளியிட்ட தகவலில், சிம்புவிற்கு தான் கூறிய கதை வேறு என்றும், பிரதீபுக்கு தான் கூறியுள்ள கதை வேறு என்று கூறியுள்ளார்.

சென்னையை பின்புலமாக கொண்டு தான் இந்த கதை நகரும் என்றும், இது பிரதீப்புக்காக தான் எழுதிய தனி கதை என்றும் அஸ்வந்த் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

2026 திரைப்பட வெளியீட்டுத் தேதிகள்: புதிய பட்டியலை வெளியிட்டது ஸ்கிரீன் டெய்லி

2026 திரைப்பட வெளியீட்டுத் தேதிகள்: புதிய பட்டியலை வெளியிட்டது ஸ்கிரீன் டெய்லி

65மிமீ சினிமா சென்சார் சிலிக்கான் வேஃபரை காட்சிப்படுத்தியது சோனி: 2027-இல் அறிமுகமாகிறது

65மிமீ சினிமா சென்சார் சிலிக்கான் வேஃபரை காட்சிப்படுத்தியது சோனி: 2027-இல் அறிமுகமாகிறது

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்ணீர் அஞ்சலி

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்ணீர் அஞ்சலி

இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – ஜி.வி.பிரகாஷ் குமார் இரங்கல்!

இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – ஜி.வி.பிரகாஷ் குமார் இரங்கல்!

99 வயதிலும் செம ஆக்டிவ்! பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடி பூஜா உமாசங்கர் வெளியிட்ட க்யூட் போட்டோ

99 வயதிலும் செம ஆக்டிவ்! பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடி பூஜா உமாசங்கர் வெளியிட்ட க்யூட் போட்டோ

 இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் காலமானார்