Jul 27, 2026
Thisaigal NewsYouTube
99 வயதிலும் செம ஆக்டிவ்! பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடி பூஜா உமாசங்கர் வெளியிட்ட க்யூட் போட்டோ
சினிமா

99 வயதிலும் செம ஆக்டிவ்! பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடி பூஜா உமாசங்கர் வெளியிட்ட க்யூட் போட்டோ

Share:

நடிகை பூஜா உமாசங்கர் தனது பாட்டியின் 99-வது பிறந்தநாளைக் கொண்டாடிய நெகிழ்ச்சியான தருணம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மாதவனின் 'ஜே ஜே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அட்டகாசம், ஜித்தன், உள்ளம் கேட்குமே, நான் கடவுள் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் இலங்கையைச் சேர்ந்த நடிகை பூஜா. கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகியிருந்த அவர், சமீபகாலமாக சிங்களத் திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்தச் சூழலில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாட்டியுடன் இருக்கும் க்யூட்டான புகைப்படம் ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.

இக்காலக்கட்டத்தில் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளைப் பெறுவது அரிதாகி வரும் வேளையில், 99 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் தனது பாட்டியை 'டைம்லஸ் பியூட்டி' என்று பூஜா வர்ணித்துள்ளார். மேலும், கடவுளின் கருணையோடு ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாகக் கடக்க வேண்டும் என்றும், அடுத்த ஆண்டும் இதே போல 100-வது பிறந்தநாளைக் கொண்டாடி செஞ்சுரி அடித்து புகைப்படத்தைப் பகிர வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். மீண்டும் தமிழ் சினிமாவுக்கு பூஜா திரும்ப வேண்டும் என்று அவரது ரசிகர்கள் இப்புகைப்படத்தின் கீழ் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related News

தான் ஒரு தாய் என்பதை வெளிப்படுத்திய நடிகை பத்மபிரியா: நெகிழ்ச்சியான பதிவுடன் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட்டம்

தான் ஒரு தாய் என்பதை வெளிப்படுத்திய நடிகை பத்மபிரியா: நெகிழ்ச்சியான பதிவுடன் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட்டம்

வாழ்த்துகள், எனது அன்பான கரப்பான் பூச்சிகளே: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து

வாழ்த்துகள், எனது அன்பான கரப்பான் பூச்சிகளே: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து

நடிகர் தனுஷின் குடும்பப் பின்னணி: கஸ்தூரி ராஜா, செல்வராகவன் முதல் ரஜினிகாந்த் தொடர்பு வரை

நடிகர் தனுஷின் குடும்பப் பின்னணி: கஸ்தூரி ராஜா, செல்வராகவன் முதல் ரஜினிகாந்த் தொடர்பு வரை

நடிகர் விஜய்யுடன் தனது பழைய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சுவாதி: 'எனது முதல் ஹீரோ இளைய தளபதி விஜய்' என்று நெகிழ்ச்சி

நடிகர் விஜய்யுடன் தனது பழைய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சுவாதி: 'எனது முதல் ஹீரோ இளைய தளபதி விஜய்' என்று நெகிழ்ச்சி

தேசிய விருதுகள் சர்ச்சை: 'ராயன்' படத்தை விடச் சிறந்த படங்கள் வெளிவந்தன - நடிகர் தனுஷ் விளக்கம்

தேசிய விருதுகள் சர்ச்சை: 'ராயன்' படத்தை விடச் சிறந்த படங்கள் வெளிவந்தன - நடிகர் தனுஷ் விளக்கம்

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடிகை ஜோதிகா ஆதரவு

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடிகை ஜோதிகா ஆதரவு