Aug 13, 2026
Thisaigal NewsYouTube
'சிக்மா' படம் மூலம் 14 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக் கொடுக்கும் ஷிவ் பண்டிட்: இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்குப் பாராட்டு
சினிமா

'சிக்மா' படம் மூலம் 14 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக் கொடுக்கும் ஷிவ் பண்டிட்: இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்குப் பாராட்டு

Share:

நடிகர் விஜய் அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படத்தின் மூலம், சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ஷிவ் பண்டிட் தமிழ் சினிமாவில் மீண்டும் களமிறங்கவுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான 'லீலை' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களை வென்ற ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்குத் திரும்புவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நக்கீரன் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய்யின் இயக்கத்தைப் பாராட்டிப் பேசியுள்ளார். ஜேசன் சஞ்சய் மிகவும் தெளிவான பார்விக் கோணத்தைக் கொண்டிருப்பதாகவும், தனக்கு என்ன வேண்டும் என்பதில் மிகத் துல்லியமாகச் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த அதிரடித் திரைப்படத்தில் ஷிவ் பண்டிட் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எஸ். தமனின் விறுவிறுப்பான இசை மற்றும் கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இத்திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், வரும் ஜூலை 31 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.

Related News