Aug 7, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் ஹாலிவுட் நடிகர் மார்க் வால்பெர்க் – நெட்பிலிக்ஸ் படப்பிடிப்பிற்காக வருகை
சினிமா

பினாங்கில் ஹாலிவுட் நடிகர் மார்க் வால்பெர்க் – நெட்பிலிக்ஸ் படப்பிடிப்பிற்காக வருகை

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை.12-

பிரபல ஹாலிவுட் நடிகரான Mark Wahlberg, Netflix-இன் புதிய திரைப்படமான 'The Big Fix' படப்பிடிப்பிற்காக பினாங்கிற்கு வருகை புரிந்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில், Mark Wahlberg கார் ஒன்றிலிருந்து இறங்கி கடைக்குள் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இதைக் கண்ட அவரது மலேசிய ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

மேலும், படப்பிடிப்பிற்க்காக பெரிய கேமரா அமைப்புகள், ஒளி உபகரணங்கள் மற்றும் சிறப்பு படப்பிடிப்பு வசதிகள் அமைக்கப்பட்டிருந்ததுடன், சில சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் மார்க் வால்பெர்குடன் பிரிட்டிஷ் நடிகர் Riz Ahmed முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அனைத்துலக அளவில் நடைபெற்று வரும் இப்படத்தின் சில முக்கிய காட்சிகள் பினாங்கில் படமாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

Related News