Jun 29, 2026
Thisaigal NewsYouTube
தயாரிப்பாளர் இல்லத் திருமண விழாவில் விஜய், திரிஷா ஜோடியாகப் பங்கேற்பு
சினிமா

தயாரிப்பாளர் இல்லத் திருமண விழாவில் விஜய், திரிஷா ஜோடியாகப் பங்கேற்பு

Share:

சென்னை, மார்ச்.06-

சென்னையில் நடந்த திருமண விழா ஒன்றில், நேற்று, தவெக கட்சித் தலைவரும், நடிகருமான விஜய், நடிகை திரிஷாவுடன் ஒன்றாக பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கும் நிலையில், நேற்று இருவரும் தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷின் இல்லத் திருமண விழாவிற்கு ஒன்றாக வருகை புரிந்தனர்.

சங்கீதா தனது விவாகரத்து மனுவில், கடந்த 2021-ஆம் ஆண்டு முதல், தனது கணவர் விஜய், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

அதே வேளையில், அவசியம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை வெளியிடுவேன் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், விஜய், திரிஷா இருவரும் ஒரே வண்ணத்தில் ஆடை அணிந்திருந்ததோடு, ஒரே காரில் பயணம் செய்து நேற்றைய விழாவில் ஜோடியாகக் கலந்து கொண்டனர்.

இந்த விவகாரம் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

பூசான் திரைப்பட விழா 2026: 'ஆசிய சினிமா ஃபண்ட்' நிதியுதவிக்கு 12 திரைப்படத் திட்டங்கள் தேர்வு

பூசான் திரைப்பட விழா 2026: 'ஆசிய சினிமா ஃபண்ட்' நிதியுதவிக்கு 12 திரைப்படத் திட்டங்கள் தேர்வு

பார்க்ஸ்வில்லில் 'சன்செட் சினிமா' திறந்தவெளி திரைப்படக் காட்சி மீண்டும் தொடக்கம்

பார்க்ஸ்வில்லில் 'சன்செட் சினிமா' திறந்தவெளி திரைப்படக் காட்சி மீண்டும் தொடக்கம்

மருத்துவமனை சூழலில் இருந்து ஒரு தற்காலிக விடுதலை; மான்செஸ்டர் மருத்துவமனையில் நோயாளிகளுக்காக பிரத்யேகத் திரையரங்கம் திறப்பு

மருத்துவமனை சூழலில் இருந்து ஒரு தற்காலிக விடுதலை; மான்செஸ்டர் மருத்துவமனையில் நோயாளிகளுக்காக பிரத்யேகத் திரையரங்கம் திறப்பு

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் மாரடைப்பால் காலமானார்

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் மாரடைப்பால் காலமானார்

பிராட்போர்டு திரையரங்குகள்: இந்த வார இறுதியில் வெளியாகும் சூப்பர்கர்ல், டாய் ஸ்டோரி 5 திரைப்படங்கள்!

பிராட்போர்டு திரையரங்குகள்: இந்த வார இறுதியில் வெளியாகும் சூப்பர்கர்ல், டாய் ஸ்டோரி 5 திரைப்படங்கள்!

கோலிவுட்டை மாற்றியமைக்கும் ஓடிடி; தமிழ் சினிமாவின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் தீவிரம்!

கோலிவுட்டை மாற்றியமைக்கும் ஓடிடி; தமிழ் சினிமாவின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் தீவிரம்!