Sep 2, 2026
Thisaigal NewsYouTube
பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் மாரடைப்பால் காலமானார்
சினிமா

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் மாரடைப்பால் காலமானார்

Share:

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் சென்னையில் இன்று தமது 73-வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அண்மையில், மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் பணியாற்றி, அவரது திரைப்படத்திலியே நடிகனாக அறிமுகப்படுத்தப்பட்டவர் கே.பாக்கியராஜ்.

திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்பட்ட அவர், முந்தானை முடிச்சு உள்ளிட்ட தமது குடும்பப் பாங்கான திரைப்படங்களின் மூலமாக மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News