Sep 2, 2026
Thisaigal NewsYouTube
இந்தியச் சினிமாவால் உலகளாவிய நிலையை எட்ட முடியாது என்றார்கள்: பிரியங்கா சோப்ரா
சினிமா

இந்தியச் சினிமாவால் உலகளாவிய நிலையை எட்ட முடியாது என்றார்கள்: பிரியங்கா சோப்ரா

Share:

பிரான்சில் நடைபெற்ற 'கான்ஸ் லயன்ஸ்' மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய உலகப் புகழ்பெற்ற இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனஸ், கடந்த இரண்டு தசாப்தங்களில் உலகளவில் இந்தியத் திரையுலகின் அசுர வளர்ச்சியைப் பற்றியும், ஆரம்பகாலத்தில் தனக்குக் கூறப்பட்ட எதிர்மறை விமர்சனங்களைப் பற்றியும் மனம் திறந்துள்ளார்.

திரைத்துறைப் பின்னணி இல்லாத ஒருவராகத் தனது பயணத்தைத் தொடங்கியபோது, இந்தியத் திரைப்படங்கள் இந்தியர்களுக்கானவை மட்டுமே என்ற கருத்து நிலவியதாக அவர் குறிப்பிட்டார். ஆங்கில மொழி அல்லாத, இந்தி, தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளில் உருவாகும் இந்தியத் திரைப்படங்களை மற்றவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதால், ஹாலிவுட் சினிமா போல இந்தியச் சினிமாவால் ஒருபோதும் உலகளாவிய நிலையை எட்ட முடியாது என்று பலரும் தன்னிடம் கூறியதாகப் பிரியங்கா சோப்ரா தெரிவித்தார்.

இருப்பினும், தற்போதைய சூழலில் இந்தியத் திரைப்படங்கள் அந்தப் பழைய எண்ணங்களை உடைத்தெறிந்து, உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதாக அவர் பெருமிதத்துடன் கூறினார். ஹாலிவுட்டில் வெற்றிகரமான தடம் பதித்துள்ள பிரியங்கா சோப்ரா, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோருடன் இணைந்து 'வாரணாசி' என்ற பிரம்மாண்ட அறிவியல் புனைகதைத் திரைப்படத்தின் மூலம் மீண்டும் இந்தியச் சினிமாவிற்குத் திரும்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News