Jul 18, 2026
Thisaigal NewsYouTube
ஆஸ்திரேலியாவில் சினிமா, செய்தி இணையதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை புதிய உச்சம்; மே மாதத்தில் சாதனனை அளவிலான ஈடுபாடு!
சினிமா

ஆஸ்திரேலியாவில் சினிமா, செய்தி இணையதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை புதிய உச்சம்; மே மாதத்தில் சாதனனை அளவிலான ஈடுபாடு!

Share:

ஆஸ்திரேலியாவில் கடந்த 2026 மே மாதத்தில் சினிமா மற்றும் செய்தி இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. 'இப்சோஸ் ஐரிஸ்' தரவுகளின்படி, நாட்டின் 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இணையப் பயனாளர்களில் 23 சதவீதத்தினர் சினிமா தொடர்பான இணையதளங்கள் அல்லது செயலிகளைப் பார்வையிட்டுள்ளனர். இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 15 சதவீத வளர்ச்சியாகும். 'டெவில் வியர்ஸ் பிராடா' இன் அடுத்த பாகம், 'மைக்கேல்' பயோபிக், 'மார்டல் காம்பாட் II', 'புராஜெக்ட் ஹெயில் மேரி' மற்றும் 'தி ஷீப் டிடெக்டிவ்ஸ்' போன்ற முக்கியத் திரைப்படங்களின் வெளியீடே இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதன் மூலம் 'ஹாய்ட்ஸ் சினிமாஸ்' (33.9%), 'இவென்ட் சினிமாஸ்' (4.7%), 'வில்லேஜ் சினிமாஸ்'(19.2%) மற்றும் 'பேலஸ் சினிமாஸ்' (17.0%) ஆகிய முன்னணி நிறுவனங்களின் டிஜிட்டல் தளங்கள் பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளன. மேலும், கடந்த மே மாதத்தில் மட்டும் ஆஸ்திரேலிய சினிமாக்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 119 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.

மறுபுறம், செய்தி ஊடகங்களைப் பொறுத்தமட்டில் 21 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் செய்தி இணையதளங்களைப் பயன்படுத்தியுள்ளனர். இது மொத்த இணையப் பயனாளர்களில் 93.2 சதவீதமாகும். பயனர்கள் சராசரியாக 3.39 மணி நேரத்தைச் செய்திகளை வாசிப்பதில் செலவிட்டுள்ளனர். 'ஆலிஸ் ஸ்பிரிங்ஸ்' இல் ஐந்து வயது சிறுமி கடத்தப்பட்ட விவகாரம், 'ஐஎஸ்ஐஎஸ்' மணமகள்கள் தொடர்பான செய்திகள் மற்றும் நாட்டின் கூட்டாட்சி பட்ஜெட் போன்ற உள்நாட்டுச் செய்திகளும், 'மெட் காலா', 'பிரீமியர் லீக்' மற்றும் 'சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் போன்ற சர்வதேசச் செய்திகளும் வாசகர்களைப் பெரிதும் ஈர்த்துள்ளன. இதில் 'நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா' நிறுவனம் மட்டும் சுமார் 18.04 மில்லியன் பயனர்களை ஈர்த்து சந்தையில் முன்னிலையில் உள்ளது.

Related News