நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் பட்டி தொட்டி எல்லா பக்கங்களிலும் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் இயக்குனராக நெல்சன் ஜெயித்து விட்டார் என்றே சொல்லலாம். எத்தனை பேர் உன்னை பார்த்து தோற்றுப் போய்விட்டாய் என்று சொன்னாலும் உன் தோல்வியை நீயாய் ஒத்துக் கொள்ளும் வரை போராடு என்று சொல்வதுண்டு.
அதை தான் தற்போது நெல்சன் சாதித்துக் காட்டியிருக்கிறார். இவர் ஜெயிலர் படத்திற்கு முன் விஜய்யை வைத்து எடுத்த பீஸ்ட் படம் பல கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி இவரை தொடர்ந்து அவமானப்படுத்தி வந்தார்கள். ஆனால் அதை மறக்கடிக்கும் விதமாக தற்போது ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விட்டார்.
இன்னும் சொல்லப்போனால் வாரிசு படத்தை விட பீஸ்ட் படம் ஓரளவு நல்ல விமர்சனங்களை தான் பெற்றிருக்கிறது. இந்த இரண்டு படங்களுமே விஜய்க்கு தான் செட் ஆகாமல் போய்விட்டது. அதற்கு எந்த விதத்திலும் நெல்சன் பொறுப்பாகாது. காரணம் அவர் எடுத்த கோலமாவு கோகிலா, டாக்டர் இரண்டுமே விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றியடைந்திருக்கிறது.
ஏனென்றால் எப்போதுமே வெற்றியை தலைக்கு மேல் கொண்டு போக கூடாது என்று சொல்வார்கள். அதை சரியாக புரிந்து கொண்டு எப்படி வெற்றியை நோக்கி பயணிப்பது மட்டுமே கவனத்தை செலுத்தி வருகிறார். ஒரு தடவை சறுக்கியதால் பலமுறை வெற்றி பார்க்க வேண்டும் என்று போராடிக் கொண்டு வருகிறார் நெல்சன். அதற்கு ஒரு உதாரணமாக தான் ரஜினியை வைத்து சாதித்து காட்டியிருக்கிறார்.