Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ஜெயிலர் வர்மனுக்கு குவியும் பட வாய்ப்புகள்.. மாமனாரை தொடர்ந்து மருமகனுடனும் செய்யப்போகும் வில்லத்தனம்
சினிமா

ஜெயிலர் வர்மனுக்கு குவியும் பட வாய்ப்புகள்.. மாமனாரை தொடர்ந்து மருமகனுடனும் செய்யப்போகும் வில்லத்தனம்

Share:

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பிறமொழி நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. அதிலும் மலையாள நடிகரான விநாயகன் தற்போது தமிழ் சினிமாவில் ரொம்பவே ஷைன் ஆகி கொண்டிருக்கிறார். இவர் இதற்கு முன்பு திமிரு, மரியான் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் வர்மன் கேரக்டரில் நடித்த பிறகு இவரதும் மார்க்கெட் எகிறி விட்டது.

ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த படத்தில் மலையாளியாகவே படம் முழுக்க பேசி தன்னுடைய வில்லத்தனத்தை காட்டி இருக்கிறார். மேலும் ஜெயிலர் படத்திற்கு பிறகு சோசியல் மீடியாவில் இவரை பற்றி ரசிகர்கள் அதிகமாக பேசத் துவங்கினர். அது மட்டுமல்ல இவருக்கு பட வாய்ப்புகளும் வரிசையாக குவிந்து கொண்டிருக்கிறது.

இப்பொழுது மாமனார் ரஜினியுடன் சம்பவம் செய்த விநாயகன், அடுத்ததாக மருமகன் தனுஷ் உடன் அடுத்த சம்பவத்திற்கு தயாராகி விட்டார். ஜெயிலர் படத்திற்கு பின் விநாயகன் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதிலும் விநாயகன் தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எனவே ஜெயிலர் படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து விநாயகன் நடிப்பில் கேப்டன் மில்லர், துருவ நட்சத்திரம் போன்ற இரண்டு படங்கள் வெளிவரப் போகிறது. இதை பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Related News