Oct 18, 2025
Thisaigal NewsYouTube
அசால்டா ரூ. 550 கோடி வசூலித்த ரஜினியின் ஜெயிலர்: இன்னும் 2 நாளில்
சினிமா

அசால்டா ரூ. 550 கோடி வசூலித்த ரஜினியின் ஜெயிலர்: இன்னும் 2 நாளில்

Share:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் தொடர்ந்து வசூல் சாதனைகள் செய்து கொண்டிருக்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், வசந்த்ரவி, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்டோர் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகி பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. வார நாட்களில் கூட ஜெயிலர் நல்ல வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் படம் ரிலீஸான 12 நாட்களில் உலக அளவில் ரூ. 550 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டு ரிலீஸான தமிழ் படங்களில் பெரிய ஓபனிங் கிடைத்தது ஜெயிலருக்கு தான். ஜெயிலர் படம் 13 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 291.80 கோடி வசூல் செய்திருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் இந்தியாவிலேயே ரூ. 300 கோடியை தாண்டிவிடும் என்று நம்பப்படுகிறது. நேற்று வேலை நாள் தான் என்றாலும் ஜெயிலர் இந்தியாவில் ரூ. 4.5 கோடி வசூல் வசூல் செய்திருக்கிறது.

இந்தியாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்கிற பெருமையை பெற்றிருக்கிறது ஜெயிலர். அந்த பெருமைக்குரிய பொன்னியின் செல்வன் படத்தை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டது. இந்தியாவில் அதிக வசூல் செய்த மூன்றாவது தமிழ் படமாக உலக நாயகன் கமல் ஹாசனின் விக்ரம் இருக்கிறது. ஜெயிலரின் சாதனையை முறியடிக்க இன்னொரு ரஜினி படத்தால் தான் முடியும் என்கிறார்கள் ரசிகர்கள்.

ஜெயிலரை அடுத்து ஜெய்பீம் படம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி. அந்த படத்திற்கான லுக் டெஸ்ட்டில் கலந்து கொண்டுவிட்டு தான் இமயமலைக்கு சென்றார். படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலரின் இமாலய வெற்றியால் அனைவரின் கவனமும் தலைவர் 170 பக்கம் திரும்பியிருக்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் அந்த படத்தில் இஸ்லாமியராக நடிக்கிறார் ரஜினி. ஞானவேலுக்காக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

Related News