ஏ.ஆர்.ரஹ்மானின் வாரிசுகளும் தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். மகன் ஏ.ஆர்.அமீன் 2.0 படத்தில் புல்லினங்கால், பத்துதல படத்தில் இடம்பெற்ற நினைவிருக்கா போன்ற பாடல்களை பாடியிருக்கிறார். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகளான கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சில்லுக்கருப்பட்டி, ஏலே படங்களின் இயக்குநர் ஹலிதா ஷமீமின் மின்மினி படத்துக்கு கதிஜா இசையமைக்கிறார். அப்பா போலவே அவரும் பல சாதனைகளை படைக்க ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
