Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ரஜினி போல் மறக்கடிக்கப்பட்ட சொந்த பெயர் மம்மூட்டியின் நிஜ பெயர் இதுதான்
சினிமா

ரஜினி போல் மறக்கடிக்கப்பட்ட சொந்த பெயர் மம்மூட்டியின் நிஜ பெயர் இதுதான்

Share:

மலையாள திரை உலகின் மெகா ஸ்டாராக இருக்கும் மம்மூட்டிக்கு ஏராளமான தமிழ் ரசிகர்களும் இருக்கின்றனர். அதிலும் இவர் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடித்த தளபதி இன்றளவும் கூட பலரின் ஃபேவரைட் படமாக இருக்கிறது. அந்த அளவுக்கு சூர்யா, தேவா இருவரின் கதாபாத்திரங்களும் நல்ல வரவேற்பு பெற்றது.

அவ்வாறு படத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் இந்த இரு நடிகர்களும் நெருங்கிய நண்பர்களாகவே இருக்கின்றனர். அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் ஒத்துப் போகும் ஒரு விஷயமும் இருக்கிறது. அதாவது சூப்பர் ஸ்டார் ஆக கொண்டாடப்பட்டு வரும் ரஜினியின் சொந்த பெயர் சிவாஜி ராவ் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் தற்போது அந்தப் பெயரே மறந்து போகும் அளவுக்கு அவர் உலகம் முழுவதிலும் ரசிகர்களால் ரஜினிகாந்த் என்று அறியப்பட்டு வருகிறார். அதே போன்று தான் மம்மூட்டியின் நிஜ பெயர் இது கிடையாது. அவருக்கு அம்மா, அப்பா வைத்த பெயர் முகமது குட்டி.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து தான் மம்மூட்டியின் நண்பர்களுக்கு அவருடைய ஒரிஜினல் பெயர் என்ன என்பது ஐடி கார்டு மூலம் தெரிய வந்திருக்கிறது. மேலும் இந்த பெயர் அவருக்கு பிடிக்காது என்ற ரகசியமும் தெரிந்திருக்கிறது. அதிலிருந்து அனைவரும் அவரை பட்டப்பெயர் வைத்து மம்மூட்டி என்று தான் அழைப்பார்களாம்.

அதாவது முகமது குட்டி என்ற பெயரை சுருக்கி அவ்வாறு அழைத்திருக்கிறார்கள். இதுவே பிற்காலத்தில் அவருடைய பெயராக நிலைத்து நின்று விட்டது. இவ்வாறாக தன்னுடைய சொந்த பெயரை வெறுத்த மெகா ஸ்டார் இன்று பட்டப்பெயரால் அனைவராலும் புகழப்படும் ஒருவராக இருக்கிறார். அந்த வகையில் ரஜினி, மம்மூட்டி இருவருக்கும் இந்த பெயர் விஷயத்தில் நல்ல ஒற்றுமை இருக்கிறது

Related News