Jun 29, 2026
Thisaigal NewsYouTube
சரவாக் வீரர் ஜோஹான் உட்பட மத்திய கிழக்கில் சிக்கியுள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும்: துணையமைச்சர் ரெந்தாப் பிரார்த்தனை
விளையாட்டு

சரவாக் வீரர் ஜோஹான் உட்பட மத்திய கிழக்கில் சிக்கியுள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும்: துணையமைச்சர் ரெந்தாப் பிரார்த்தனை

Share:

கோலாலம்பூர், மார்ச்.03-

சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல முவா தாய் வீரர் ஜோஹான் கசாலி சுல்பிகார் உட்பட மத்திய கிழக்குப் பிரதேசங்களில் சிக்கித் தவிக்கும் மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் என மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோ ஜெரால்ட் ரெந்தாப் ஜாபு வலியுறுத்தியுள்ளார்.

நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் மலேசியர்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும், விரைவில் அவர்கள் நாடு திரும்பத் தான் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கும் ரெந்தாப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, விமானங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ள காரணத்தால், தனது குடும்பத்தினருடன் மக்காவில் சிக்கித் தவிப்பதாக ஜோஹான் கசாலி சுல்பிகார் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

உம்ரா கடமைகளுக்காக தனது குடும்பத்தினருடன் சவுதி அரேபியாவிற்குச் சென்றதாகவும் ஜோஹான் குறிப்பிட்டுள்ளார்.

Related News

உலகக் கோப்பை தோல்வி: தென்கொரிய பயிற்சியாளர் ராஜினாமா; நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனம்

உலகக் கோப்பை தோல்வி: தென்கொரிய பயிற்சியாளர் ராஜினாமா; நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனம்

உலகக் கோப்பை: ஜப்பான் அணிக்கு பின்னடைவு

உலகக் கோப்பை: ஜப்பான் அணிக்கு பின்னடைவு

பிரான்ஸிடம் ஈராக் தோல்வி; தென் கொரிய இணையவாசிகளின் மனங்களை வென்றார் இலக்குக் காப்பாளர் அஹ்மத் பாசில்

பிரான்ஸிடம் ஈராக் தோல்வி; தென் கொரிய இணையவாசிகளின் மனங்களை வென்றார் இலக்குக் காப்பாளர் அஹ்மத் பாசில்

உலகக் கோப்பை காற்பந்து: உருகுவே வெளியேற்றம்; அர்ஜென்டினாவுடன் மோதுவதைத் தவிர்த்தது ஸ்பெயின்!

உலகக் கோப்பை காற்பந்து: உருகுவே வெளியேற்றம்; அர்ஜென்டினாவுடன் மோதுவதைத் தவிர்த்தது ஸ்பெயின்!

உலகக் கோப்பை கால்பந்து: எம்பாப்பே - ஹாலாண்ட் மோதும் பிரான்ஸ், நார்வே அதிரடிப் பலப்பரீட்சை!

உலகக் கோப்பை கால்பந்து: எம்பாப்பே - ஹாலாண்ட் மோதும் பிரான்ஸ், நார்வே அதிரடிப் பலப்பரீட்சை!

உலகக் கிண்ணக் கால்பந்து: ஜப்பான் - ஸ்வீடன் ஆட்டம் சமநிலை; இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

உலகக் கிண்ணக் கால்பந்து: ஜப்பான் - ஸ்வீடன் ஆட்டம் சமநிலை; இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்