புதுடெல்லி, ஜனவரி.17-
நாட்டின் மகளிர் இரட்டையர் பிரிவு வீராங்கனைகளான பெர்லி டான்-எம். தீனா இந்திய பொது பூப்பந்து போட்டியில் வாகை சூடும் வாய்ப்பை இழந்தனர். அரையிறுதி ஆட்டத்தில் அவர்கள் ஜப்பானிய ஜோடியிடம் தோல்வி கண்டனர்.
பெர்லியும் எம். தீனாவும் யுகி ஃபுகுஷிமா-மயு மட்சுமொதோவுடன் களமிறங்கினர். முதல் செட்டில் 16-21 என்றும் இரண்டாம் செட்டில் 13-21 என்ற புள்ளிகளில் அவர்கள் வீழ்ந்தனர். அவ்வாட்டம் 46 நிமிடங்கள் நீடித்தது.








