Jun 30, 2026
Thisaigal NewsYouTube
 ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற எஸ்.சிவசங்கரிக்கு பிரதமர் பாராட்டு
விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற எஸ்.சிவசங்கரிக்கு பிரதமர் பாராட்டு

Share:

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நேற்று நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற தேசிய ஸ்குவாஷ் நட்சத்திரமான எஸ். சிவசங்கரிக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது உயரிய பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

சிவசங்கரியின் இந்த வெற்றியானது நாட்டின் பெருமையை உயர்த்துவதோடு, இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகவும், ஊக்கமாகவும் இருப்பதாக அன்வார் விவரித்துள்ளார்.

மேலும், இந்த சாதனையானது தேசிய விளையாட்டு உலகிற்குப் பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், உலக அரங்கில் மலேசியாவுக்கு பெருமை சேர்த்து வரும் நமது வீரர்களின் உறுதி, கட்டுப்பாடு மற்றும் போராட்ட மனப்பான்மைக்கு சான்றாகும் என்றும் அன்வார் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உலகத் தரவரிசைப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ள சிவசங்கரி, இறுதிப்போட்டியில் 19-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கணை மரீனா ஸ்டெபனோனியை 11-7, 11-4, 11-8 என நேரடி செட் கணக்கில் வென்று பட்டத்தை கைப்பற்றினார்.

28 நிமிடங்களில் இந்த வெற்றியை அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

உலகக் கோப்பை தோல்வி: தென்கொரிய பயிற்சியாளர் ராஜினாமா; நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனம்

உலகக் கோப்பை தோல்வி: தென்கொரிய பயிற்சியாளர் ராஜினாமா; நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனம்

உலகக் கோப்பை: ஜப்பான் அணிக்கு பின்னடைவு

உலகக் கோப்பை: ஜப்பான் அணிக்கு பின்னடைவு

பிரான்ஸிடம் ஈராக் தோல்வி; தென் கொரிய இணையவாசிகளின் மனங்களை வென்றார் இலக்குக் காப்பாளர் அஹ்மத் பாசில்

பிரான்ஸிடம் ஈராக் தோல்வி; தென் கொரிய இணையவாசிகளின் மனங்களை வென்றார் இலக்குக் காப்பாளர் அஹ்மத் பாசில்

உலகக் கோப்பை காற்பந்து: உருகுவே வெளியேற்றம்; அர்ஜென்டினாவுடன் மோதுவதைத் தவிர்த்தது ஸ்பெயின்!

உலகக் கோப்பை காற்பந்து: உருகுவே வெளியேற்றம்; அர்ஜென்டினாவுடன் மோதுவதைத் தவிர்த்தது ஸ்பெயின்!

உலகக் கோப்பை கால்பந்து: எம்பாப்பே - ஹாலாண்ட் மோதும் பிரான்ஸ், நார்வே அதிரடிப் பலப்பரீட்சை!

உலகக் கோப்பை கால்பந்து: எம்பாப்பே - ஹாலாண்ட் மோதும் பிரான்ஸ், நார்வே அதிரடிப் பலப்பரீட்சை!

உலகக் கிண்ணக் கால்பந்து: ஜப்பான் - ஸ்வீடன் ஆட்டம் சமநிலை; இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

உலகக் கிண்ணக் கால்பந்து: ஜப்பான் - ஸ்வீடன் ஆட்டம் சமநிலை; இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்