Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பேராக் காற்பந்து ரசிகர்கள் நிம்மதி: செப்டம்பர் மாதம் மீண்டும் திறக்கப்படும் ஈப்போ ஸ்டேடியம்
விளையாட்டு

பேராக் காற்பந்து ரசிகர்கள் நிம்மதி: செப்டம்பர் மாதம் மீண்டும் திறக்கப்படும் ஈப்போ ஸ்டேடியம்

Share:

ஈப்போ, மார்ச்.02-

ஈப்போவிலுள்ள பேராக் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் ஆடுகள மேம்பாட்டுப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால், வரும் செப்டம்பர் மாதம் முதல் அங்கு மீண்டும் காற்பந்துப் போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பேராக் மாநில வீடமைப்பு, மற்றும் ஊராட்சிமன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் Sandrea Ng இது குறித்து விவரிக்கையில், கடந்த ஜூன் 2025-இல் தொடங்கிய ஆடுகளப் புனரமைப்புப் பணிகள் தற்போது 75 விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

நீர் பாசன வசதி, தொழில்நுட்பச் சீரமைப்பு மற்றும் கூடுதல் கட்டுமானப் பணிகள் காரணமாக, திட்டமிடப்பட்ட கால அட்டவணையை விடப் பணிகள் சற்றுத் தாமதமடைந்துள்ளன. இருப்பினும், புதிய நீர் பாசன முறை, வடிகால் அமைப்பு மற்றும் புதிய புற்களை நடும் பணிகள் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

உலகக் கோப்பை தோல்வி: தென்கொரிய பயிற்சியாளர் ராஜினாமா; நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனம்

உலகக் கோப்பை தோல்வி: தென்கொரிய பயிற்சியாளர் ராஜினாமா; நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனம்

உலகக் கோப்பை: ஜப்பான் அணிக்கு பின்னடைவு

உலகக் கோப்பை: ஜப்பான் அணிக்கு பின்னடைவு

பிரான்ஸிடம் ஈராக் தோல்வி; தென் கொரிய இணையவாசிகளின் மனங்களை வென்றார் இலக்குக் காப்பாளர் அஹ்மத் பாசில்

பிரான்ஸிடம் ஈராக் தோல்வி; தென் கொரிய இணையவாசிகளின் மனங்களை வென்றார் இலக்குக் காப்பாளர் அஹ்மத் பாசில்

உலகக் கோப்பை காற்பந்து: உருகுவே வெளியேற்றம்; அர்ஜென்டினாவுடன் மோதுவதைத் தவிர்த்தது ஸ்பெயின்!

உலகக் கோப்பை காற்பந்து: உருகுவே வெளியேற்றம்; அர்ஜென்டினாவுடன் மோதுவதைத் தவிர்த்தது ஸ்பெயின்!

உலகக் கோப்பை கால்பந்து: எம்பாப்பே - ஹாலாண்ட் மோதும் பிரான்ஸ், நார்வே அதிரடிப் பலப்பரீட்சை!

உலகக் கோப்பை கால்பந்து: எம்பாப்பே - ஹாலாண்ட் மோதும் பிரான்ஸ், நார்வே அதிரடிப் பலப்பரீட்சை!

உலகக் கிண்ணக் கால்பந்து: ஜப்பான் - ஸ்வீடன் ஆட்டம் சமநிலை; இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

உலகக் கிண்ணக் கால்பந்து: ஜப்பான் - ஸ்வீடன் ஆட்டம் சமநிலை; இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்