லண்டன், ஜனவரி.16-
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் இடைக்கால நிர்வாகியாக மைக்கேல் கேரிக் பொறுப்பேற்றுள்ளார். இப்பருவம் முடிவடையும் வரை அவர் அப்பொறுப்பில் நீடிப்பார். மான்செஸ்டரை வெற்றியாளர் லீக்கிற்குத் தகுதி பெற வைக்கும் பொறுப்பும் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.
மான்செஸ்டரின் முன்னாள் நட்சத்திரமான மைக்கேல் கேரிக் 12 ஆண்டுகள் அவ்வணிக்காக விளையாடினார். அச்சமயத்தில் அவர் 12 முக்கியக் கிண்ணங்களை வென்றுள்ளார்.
2021 ஆம் ஆண்டு இதே போல் இடைக்கால நிர்வாகியாக இருந்த போது, மூன்று போட்டிகளில் அணியை தோல்வியின்றி வழிநடத்தி வெற்றி பெற உதவியுள்ளார். ஓராண்டுக்கும் மேல் பேரளவிலான முன்னேற்றம் இல்லாததால், ரூபன் அமோரிமை மான்செஸ்டர் நிர்வாகிப் பணியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.








