சவூதி அரேபியாவில் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஏஎப்சி ஆசிய கிண்ணக் கால்பந்து போட்டிக்கான இறுதி குலுக்கல் ரியாத்தில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது இந்தப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. விசா அட்டை வைத்திருப்பவர்களுக்கு மே 10 முதல் 48 மணிநேர முன்னுரிமை விற்பனை வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கான விற்பனை மே 12 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2027 ஜனவரி 7 முதல் பிப்ரவரி 5 வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கான நுழைவுச்சீட்டுகள் 30 சவுதி ரியால் முதல் கிடைக்கின்றன. ரியாத், ஜெத்தா மற்றும் அல் கோபார் ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், தொடக்க ஆட்டத்தில் சவூதி அரேபியா மற்றும் பாலஸ்தீன அணிகள் மோதவுள்ளன.

விளையாட்டு
ஏஎப்சி ஆசிய கிண்ணம் 2027: இறுதி குலுக்கலைத் தொடர்ந்து நுழைவுச்சீட்டு விற்பனை தொடக்கம்
Related News

ஆசியான் விளையாட்டுப் போட்டியில் மலேசியாவிற்கு முதல் பதக்கம் - கராத்தே பிரிவில் கே. தேவேந்திரனுக்கு வெண்கலப் பதக்கம்

மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவராக அப் கானி ஹசான் தேர்வு

பிரிட்டன் கார் பந்தயம்: அஜித்தை கட்டியணைத்து கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

எஃப்1 போட்டிக்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்த அமைச்சுகள், முகமைகளுக்கு உத்தரவு

சுக்பிட் 2026: பல்கலைக்கழகத்துக்காக தங்கம் வென்ற மலேசிய நட்சத்திர வீரர்!


