பேங்காக், ஜனவரி.28-
தாய்லாந்தின் நடைபெற்ற 2025 ஆசியான் பாரா விளையாட்டுப் போட்டியில் மலேசியா பதக்க இலக்கைத் தாண்டியது. மலேசியா ஒட்டுமொத்தமாக 201 பதக்கங்களை வென்றது. இது நிர்ணயிக்கப்பட்ட 181 பதக்க எண்ணிக்கையைக் கடந்தது. தங்கப் பதக்கத்திற்கு 55 என இலக்கு வைக்கப்பட்டிருந்தது. அதனையும் தாண்டி 64 தங்கப் பதக்கங்களை வாகை சூடியது.
ஒட்டு மொத்தத்தில் மலேசியா 64 தங்கம், 64 வெள்ளி, 73 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றியது. பதக்கப் பட்டியலில் மலேசியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது.








