Jan 27, 2026
Thisaigal NewsYouTube
பிலிப்பைன்சில் 350 பேருடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது
உலகச் செய்திகள்

பிலிப்பைன்சில் 350 பேருடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது

Share:

மணிலா, ஜனவரி.27-

பிலிப்பைன்ஸ் நாட்டில் 350 பேருடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 18 பேர் பலியாகினர். தெற்கு பிலிப்பைன்சில் சம்போங்கா துறைமுக நகரத்தில் இருந்து எம்பி த்ரிஷா கெர்ஸ்டின்3 என்ற கப்பல் 332 பயணிகள் மற்றும் 27 பணியாளர்களுடன் சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ தீவுக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஒருபக்கமாகச் சாய்ந்த கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கடலோர காவல்படையினர் மற்றும் மீட்பு குழுவினர் 18 பேரின் உடல்களை மீட்டனர். 316 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் மாயமானவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Related News